இலங்கையர்களின் ஆடம்பர உணவாக மாறிய அப்பம்!

0
439

ஏழைகளின் உணவாக இருந்த அப்பம் தற்போது ஆடம்பர மக்களின் உணவாக மாறியுள்ளதாக நுவரெலியா மாவட்ட பேக்கரி உரிமையாளர்களின் தலைவர் தெரிவித்துள்ளார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்க வேண்டுமென அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.

வற் வரி அதிகரிப்பு

எட்டு சதவீதமாக இருந்த வற் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி, விற்பனை மற்றும் விநியோக நடவடிக்கைகளுக்காக இரண்டரை சதவீத சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாண் மற்றும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக பாண் விற்பனை சுமார் ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலவரப்படி பாண் இறத்தல் ஒன்று 500 ரூபா வரை செல்லும் எனவும் ஏழைகளின் உணவாக இருந்த அப்பம் தற்போது ஆடம்பர மக்களின் உணவாக மாறியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.