ஆசிய கிண்ணத்தில் இலங்கை ஈட்டிய வருமானம்!

0
127

ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டிகளை இலங்கையில் நடத்த முடியாவிட்டாலும், அதனை விட அதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அதன் தலைவர் ஷம்மி சில்வா இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆசிய கிண்ணத்தில் இலங்கை ஈட்டிய  வருமானம் எவ்வளவு தெரியுமா! | Sri Lanka Earned In The Asian Cup

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்றிருந்தால் நாங்கள் 2.5 மில்லியன் டொலர்களை சம்பாதித்திருப்போம். நாட்டில் மழை மற்றும் பிற பிரச்சனைகளால், ஐசிசி தான் இங்கு விளையாட முடியாது என்ற இடத்திற்கு வந்தது.

“இலங்கைக்கு வரவே பயந்தார்கள். ஆனால் இப்போது இதன் மூலம் 4 மில்லியன் டொலர்களுக்கு மேல் கிடைத்துள்ளது. இதன் மூலம் எங்களுக்கு நல்ல இலாபம் கிடைத்ததாக கூறினார்.

6.5 மில்லியன் டொலர்கள்

எங்களுக்கு 6.5 மில்லியன் டொலர்கள் கிடைக்கும். அதன் மூலம், வைத்தியசாலைகளுக்கு மற்றும் பிற விளையாட்டுகளுக்கு பாரியளவிலான பங்களிப்பை செய்யவுள்ளோம், ஏனென்றால் விளையாட்டு அமைச்சகத்திடம் பணம் இல்லை என எமக்கு கூறப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் டிக்கெட் விற்பனை மூலம் நாங்கள் சுமார் 120 மில்லியன் ரூபாய் சம்பாதித்தோம்.”

ஆசிய கிண்ணத்தில் இலங்கை ஈட்டிய  வருமானம் எவ்வளவு தெரியுமா! | Sri Lanka Earned In The Asian Cup

“கிரிக்கட் வாரியம் தொடங்கிய நாள் முதல், எங்களிடம் 2 மில்லியன் டொலர்களுக்கு மேல் இருந்ததில்லை.எங்களின் நிலையான வைப்புத்தொகையில் இப்போது 40 மில்லியன் டொலர்கள் உள்ளன.

இவை கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் சேமிக்கப்பட்டவையாகும். “நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தில் கூட 35 மில்லியன் அமெரிக்க டொலர்கள்தான் உள்ளன.

ஆசிய கிண்ணத்தில் இலங்கை ஈட்டிய  வருமானம் எவ்வளவு தெரியுமா! | Sri Lanka Earned In The Asian Cup

வெளியில் உள்ளவர்கள் விழுங்க விரும்புகிறார்கள்

வெளியில் உள்ளவர்களுக்கு தற்போது நம்மிடம் உள்ள டொலர்கள் தெரியும். அவர்கள் அதை இப்போது விழுங்க விரும்புகிறார்கள்.” பழைய பிரச்சினையை இழுத்தடித்து, இடைக்காலக் குழு அமைத்து, பணமெல்லாம் போன பின், மீண்டும் கடனில் மூழ்கி விடுவோம் எனவும் அவர் கூறினார்.

ஆசிய கிண்ணத்தில் இலங்கை ஈட்டிய  வருமானம் எவ்வளவு தெரியுமா! | Sri Lanka Earned In The Asian Cup

இந்த நிலையில் “இன்று ஐசிசி எங்களிடம் ஏன் கடன் கேட்கவில்லை என்று கேட்கிறது, நாங்கள் இவ்வளவு காலமாக கடன் பெற்றுக் கொண்டுதான் இருந்தோம் எனவும் ஷம்மி சில்வா இதன்போது தெரிவித்தார்.