மருத்துவரைக் தேடிக் கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக அறிவித்த வான்கூவர் பிரஜை

0
410

மருத்துவர் ஒருவரை தேடிக் கொடுத்தால் சன்மானம் வழங்குவதாக வான்கூவர் பிரஜையொருவர் அறிவித்துள்ளார்.

குடும்ப மருத்துவர் ஒருவருடன் தம்மை தொடர்புபடுத்தினால் அவர்களுக்கு 5000 டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

க்ரேய் சுஸ்டர் என்பவரே இவ்வாறு வித்தியாசமான விளம்பரம் ஒன்றை பத்திரிகைகளில் செய்துள்ளார்.

சுஸ்டர் அரிதான வளர்ச்சிதை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டியுள்ளதுடன் அவ்வாறு செய்யத் தவறினால் அவரது சிறுநீரகம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

வான்கூவாரின் கிராமிய பகுதியொன்றில் வாழ்ந்து வரும் சுஸ்டரின் குடும்ப மருத்துவர் அந்தப் பகுதியை விட்டு வெளியேறியுள்ளார்.

தாம் ஊரை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாக குறித்த குடும்ப மருத்துவர் இது குறித்து சுஸ்டருக்கு முன்கூட்டியே அறிவித்திருந்தார்.

எனினும் சுஸ்டரினால் மருத்துவர் ஒருவரை தேடிக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

வசதிகள் குறைந்த அந்தக் கிராமத்திற்கு மருத்துவர்கள் வருகை தர விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து மருத்துவர் ஒருவரின் சேவையை பெற்றுக் கொடுக்க உதவினால் அவருக்கு 5000 டொலர்கள் சன்மானமாக வழங்குவதாக சுஸ்டர் பத்திரிகை விளம்பரம் மூலம் அறிவித்துள்ளார்.