கோட்டா வழங்கிய அனுமதியை ரத்து செய்ய முடியாது; சீன கப்பல் பற்றி அமெரிக்க ஊடகம் தகவல்!

0
608

இலங்கையில் வேகமாக மாறிவரும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் இலங்கையின் துறைமுக நகரமான ஹம்பாந்தோட்டைக்கு சீனா இராணுவக் கப்பலை அனுப்புகிறது.

இந்த நிலையில் சீனாவின் இந்த நடவடிக்கையானது இலங்கையின் இந்து சமுத்திரக் கரையோரப் பகுதியில் பலமான இராணுவ நிலைப்பாட்டை ஏற்படுத்த சீனா முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்புவதாக வொஸ்ப் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கோட்டா வழங்கிய அனுமதியை  ரணில் ரத்து செய்ய  முடியாது; சீன கப்பல் குறித்து அமெரிக்க ஊடகம் தகவல்! | Permission Granted By Kota Cannot Be Revoked

இலங்கைக்கு வரும் யுவான் வாங் 5 என்ற கப்பலை, இந்தியப் பெருங்கடலில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஒரு ஆய்வுக் கப்பல் என்று சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் விபரிக்கிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வர்த்தக ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பயன்படுத்துவதே சீனாவின் இலக்கு என இலங்கைக்கான முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சீனாவுக்கு இலங்கை துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவதற்கு தனது ஒப்புதலை வழங்கியதாக நம்பப்படுகிறது. இந்தநிலையில் அவருக்குப் பதிலாக வந்த புதிய அரசாங்கம் அந்த முடிவைத் திரும்பப் பெறவும், துறைமுகத்தை சீனக் கப்பல் பயன்படுத்துவதை நிறுத்தவும் வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகின்றது.

இலங்கைக்கு நிதி உதவி தேவை. 4 பில்லியன் டொலர்களை சீனாவிடம் இருந்து எதிர்பார்க்கிறது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற வேண்டுமானால், சீனாவிடம் இருந்த பெற்ற கடன்களை செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

எனவே கப்பல் அனுமதியை ரத்து செய்வதன் மூலம் சீனாவின் அதிருப்தியை அது விரும்பவில்லை என்று இலங்கை தேசிய சமாதான சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் தெரிவித்தார்.

அதேவேளை சீனாவின் நோக்கம், இலங்கைத் துறைமுகத்தை அதன் இராணுவக் கப்பல்கள் எளிதில் அணுகுவதை உறுதி செய்வதே என்றும், இதற்காக இராணுவத் தளத்தை அமைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் துணை உயர் ஸ்தானிகர்.கே.பி. ஃபேபியன் தெரிவித்துள்ளார்.

கோட்டா வழங்கிய அனுமதியை  ரணில் ரத்து செய்ய  முடியாது; சீன கப்பல் குறித்து அமெரிக்க ஊடகம் தகவல்! | Permission Granted By Kota Cannot Be Revoked

இந்தியாவைப் பொறுத்தவரை இது மிகவும் கவலையளிக்கும் ஒரு விடயமாகும், ஏனெனில் சீனா இந்தியாவிற்கு இராணுவ சவால்களை உருவாக்க முயற்சிக்கிறது. சீனா தனது பட்டுப்பாதை முன்முயற்சியின் கீழ் இலங்கையில் தொடர்ச்சியான உள்கட்டமைப்பு திட்டங்களை ஆரம்பித்த நிலையில் அதில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் ஆகியவை அடங்கும்.

இவ்வாறான நிலையில் இலங்கை, சீனாவிடம் இருந்து பெற்ற கடனை உரிய காலத்தில் செலுத்த முடியவில்லை. இதனையடுத்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்து நிதியளித்த சீன நிறுவனங்களுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்குமாறு பீய்ஜிங் 2017 இல் இலங்கையை வற்புறுத்த, அது வாய்ப்பை கொடுத்தது.

கோட்டா வழங்கிய அனுமதியை  ரணில் ரத்து செய்ய  முடியாது; சீன கப்பல் குறித்து அமெரிக்க ஊடகம் தகவல்! | Permission Granted By Kota Cannot Be Revoked

மேலும் சீன திட்டங்கள் மற்றும் கடன்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையற்றவை மற்றும் அதிக வட்டி வீதத்தைக் கொண்டவை என்று அமெரிக்க அரசாங்கம் கூறுவது சரியானது என்று ஜெஹான் பெரேரா வொய்ஸ் ஒப் அமெரிக்காவிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.