நீதிமன்றத்தில் டனிஸ் அலி முன்னிலை

0
57

ரூபவாஹினி ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட “டனிஸ் அலி” நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புறப்படுவதற்கு தயாராக இருந்த விமானத்தில் இருந்து, கடந்த 26ஆம் திகதி மாலை அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

டனிஸ் அலி நீதிமன்றில் முன்னிலை | Danis Ali In Court

அதன் பின்னர் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது இன்று வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.