டனிஸ் அலி கைது தொடர்பாக வெளியான பரபரப்பு தகவல்

0
649

இலங்கையின் சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவில் விமானத்தில் வைத்து செவ்வாய் (26-07-2022) கைது செய்யப்பட்ட காலிமுகத்திடல் போராட்ட செயற்பாட்டாளர் தானிஸ் அலி தொடர்பில் பரபரப்பான தகவல் ஒன்று தென்னிங்கை ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

விமானத்தில் வைத்து அதிரடியாக செய்யப்பட்டவர் தொடர்பில் வெளியான பகீர் தகவல் | Sri Lanka Airport Protesters Arrest Shocking News

கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர் என்பது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டு காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து டனிஸ் அலி நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஒருவர்,

விமானத்தில் வைத்து அதிரடியாக செய்யப்பட்டவர் தொடர்பில் வெளியான பகீர் தகவல் | Sri Lanka Airport Protesters Arrest Shocking News

மாணவர் வீசாவில் அவுஸ்திரேலியா சென்று விசா நிபந்தனைகளை மீறி ஓராண்டுக் காலம் தலைமறைவாகியிருந்த டனிஸ் அலி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஐஸ் எனப்படும் போதைப்பொருளுக்கு அடிமையாகி நாட்டிலுள்ள மற்றுமொரு நபருடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக்குவது தொடர்பான போராட்டத்தின் முன்னின்று செயற்பட்ட டனிஸ் அலி தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி தொலைக்காட்சிக்குள் புகுந்து ஒளிபரப்புகளுக்கு தடை விதித்ததுடன் நேரடி ஒளிபரப்பும் செய்திருந்தார்.

அந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.