ஜனாதிபதி அலுவலகத்தில் இரு புதிய நியமனங்கள்!

0
134

ஜனாதிபதி அலுவலகத்தில் பல புதிய நியமனங்களை ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) செய்துள்ளார்.

இந்நிலையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அமைச்சர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளராக ஊடகவியலாளர் டினூக் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், டினூக் கொலம்பகே 2018 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கவின் ஊடக மற்றும் தொடர்பாடல் ஆலோசகராக பணியாற்றினார்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இரு புதிய நியமனங்கள்! யார் யாருக்கு பதவி தெரியுமா? | Two New Appointments Sri Lanka Presidential Office

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமை அதிகாரியாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Sagala Ratnayake