பெற்றோல் கேட்ட குடும்பஸ்பதர் மீது பொலிஸர் கொலை வெறித்தாக்குதல்!

0
609

பெற்றோல் கேட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் பொலிஸாரால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் வவுலுகல மக்கொன பகுதியைச் சேர்ந்த சமந்த ராஜபக்ஷ என்ற 49 வயதுடைய நபரே இவ்வாறு தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலில் அவரது கணுக்கால், பிட்டம், கால், தோள்பட்டை, விதைப்பை, உதடு மற்றும் காதுக்கு அருகில் என சுமார் 15 இடங்களில் காயங்கள், கீறல்கள் மற்றும் வீக்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தெரிவிக்கையில்,

நான் ஒரு டாக்ஸி டிரைவர். மக்கொன சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 20 ஆம் திகதி முதல் பெற்றோலுக்காக காத்திருந்தேன். எனினும் எனக்கு பெட்ரோல் கிடைக்கவில்லை.

கடந்த 24ஆம் திகதி இரவு, பொலிஸ் ஜீப் நிறுத்தப்பட்டு கேன்கள் மற்றும் அதிக மோட்டார் சைக்கிள்களுக்கு பெற்ரோல் வழங்கப்பட்டு கொண்டிருந்தது . இதன்போது நானும் 2 லிற்றர் பெற்றோல் கேட்டபோது அங்கிருந்த பொலிசார் என்னை அடித்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பயாகல பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்கினார்.

பெற்றோல் கேட்ட  குடும்பஸ்பதர் மீது பொலிஸர்  கொலைவெறித்தாக்குதல்! | Police Brutality On The Family Who Asked Petrol

அதுமட்டுமல்லாது அன்றிரவு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் என்னை அறையிலிருந்து வெளியே அழைத்துச் சென்று கைத்தடியை பற்களுக்கு இடையில் வைத்து விட்டு கடுமையாக தாக்கியதாக சமந்த ராஜபக்ஷ வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் பாணந்துறை மனித உரிமைகள் அலுவலகத்திலும் சமந்த ராஜபக்ஷ முறைப்பாடு செய்துள்ளதுடன் பாணந்துறை வைத்தியசாலை பொலிஸார் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.