விரைவில் நாடு திரும்பும் கோட்டாபய; அமைச்சர் பந்துல குணவர்தன!

0
393

நாட்டைவிட்டு தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய  நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அத்துடன் போர்க்குற்றங்கள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்யுமாறு சிங்கப்பூர் சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் அமைச்சரவையில் எதுவும் கலந்துரையாடப்படவில்லை என அவர் கூறினார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.

விரைவில் நாடு திரும்பவுள்ள கோட்டாபய;  முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்! | Minister Released Important Information Gota

இதன்போது அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், கேள்வி – பதில் நேரத்தில் சிங்கப்பூரில் தலைமறைவு வாழ்வு வாழும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை, போர்க்குற்றங்களுக்காக கைது செய்யுமாறு அந்நாட்டு சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கோட்டாபயவுக்கு விசா வழங்க அமெரிக்காவும் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர், நீங்கள் கூறும் விவகாரங்கள் பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எனக்கும் அது பற்றி தெரியாது. முன்னாள் ஜனாதிபதி வெளிநாட்டில் பதுங்கவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே சென்றுள்ளார்.

அங்கு அவருக்கு ஏதேனும் சிக்கல் எனில், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் எமது நாட்டில் உள்ள துறைசார் அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என கூறினார்.

மேலும்  முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் தலைமறைவாகவில்லை. அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார். எனினும் , கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்புவார் அமைச்சர் கூறினார்.

எனினும் அவர் நாட்டுக்கு வருகை தரும் திகதி, விவரம் குறித்த தகவல்கள் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் பந்துல இதன்போது கூறினார்.

அதேவேளை, புதிய அரசின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் அடுத்த மாதத்துக்குள் முன்வைக்கப்படும் எனவும், சர்வக்கட்சி அரசமைப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பின் பிரகாரமே இடம்பெறும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன் இதன்போது மேலும் தெரிவித்தார்.