ஜனாதிபதி ரணிலின் பள்ளிப் பருவம் குறித்து சகமாணவன் வெளியிட்ட கருத்து!

0
232

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பள்ளிப் பருவம் தொடர்பில் சகமாணவன் தெரிவித்த கருத்துக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அந்தவகையில் பாடசாலையிலும் சத்தமின்றியே சாதிப்பவர் ரணில். செய்து முடித்த பிறகே அது எமக்குத் தெரியவரும் என ரணிலுடன் ஒரே வகுப்பில் கல்வி பயின்ற சட்டத்தரணி தீப்தி லியனகே தெரிவித்துள்ளார்.

வார இதழொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் அநுர பண்டாரநாயக்க ஆகியோர் எம்முடன் ஒரே வகுப்பிலேயே படித்தவர்கள்.

ரணிலும்,அநுரவும் வகுப்பறைக்குள் ‘ ரொக்கெட் ‘ விட்டு விளையாடுவார்கள் . சிறார் பருவத்தில் விளையாட்டுக்கே முன்னுரிமை வழங்கினோம் . ஜே.ஆரை . ரணில் அங்கிள் என்றே அழைப்பார்.

வகுப்பில் இருந்த உயரமான மாணவன் ரணில் தான். அவரும், சந்திரிகா குமாரதுங்கவும் ஒன்றாக நடனம் பயின்றவர்கள் . அந்தக் காலத்தில் பாடசாலையில் அழகான – மிடுக்கானவர் ரணில்தான்.

ரணில் சட்டத்தரணியாகிய தன் பின்பு ரோஹண விஜேவீரவுக்காக வாதாடியுள்ளார். பாடசாலைக் காலத்திலும் சரி தற்போதைய சூழ்நிலையிலும் சரி ரணில் சத்தமின்றியே சாதிப்பார்.

செய்து முடித்த பிறகே எமக்கு அது தெரியவரும் . தினேஷ் போராட்ட குணம் கொண்டவர் என சட்டத்தரணி தீப்தி லியனகே தெரிவித்துள்ளார்.