ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தில் எதிர்பாராத சரிவு

0
95

உலகின் முதனிலை சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தின் வருமானம் எதிர்பார்க்காத வகையில் சரிவினை சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ட்விட்டர் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அந்த நிறுவனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ட்விட்டர் நிறுவன பங்குகளை ஒரு பங்கிற்கு 54.20 டாலர் என்ற அளவில் ஒட்டுமொத்தமாக 4400 கோடிக்கு வாங்க விரும்புவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தமும் கையொப்பமானது. எனினும் ட்விட்டர் நிறுவனம் அந்தப் போலிக் கணக்குகள் ஸ்பாம் குறித்த விவரங்களை வழங்கவில்லை.

அதனால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக எலான் மஸ்க் அதிரடியாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார்.

இது தொடர்பாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகமான ட்விட்டரில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த சரிவு 2022 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் பதிவாகியுள்ளது.

இந்த சரிவு தொழில்துறை ஆய்வாளர்களின் மதிப்பீடு செய்ததை விட அதிகமாக உள்ளது. சமூக ஊடக நிறுவனம் ஏப்ரல் – ஜூன் 2022 காலாண்டில் $270 மில்லியன் அல்லது ஒரு பங்குக்கு எட்டு சதவீதத்தை இழந்துள்ளது என FactSet மதிப்பீடு கூறுகிறது.

எலோன் மஸ்க் – ட்விட்டர் இடையிலான ஒப்பந்தம் காரணமாக பங்குகளின் மதிப்பு 14 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வருமானத்தில் சரிவு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் காரணமாக விளம்பரச் செலவுகளைக் நிறுவனம் குறைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் மஸ்க் ஒப்பந்தத்தில் உள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. நிறுவனத்தின் தினசரி செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்துடன் ஒப்பிடும்போது 16.6 சதவீதம் அதிகரித்து 23.78 மில்லியனாக அதிகரித்துள்ளது.

எனினும், ட்விட்டரின் காலாண்டு வருவாய் பெரிதும் குறைந்துள்ளது. எலோன் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் அவரும் இப்போது சிக்கலில் இருக்கிறார். எலான் மாஸ்க் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு சமூக ஊடக நிறுவனம் டெலாவேர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில் இந்த வழக்கு அக்டோபரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

ட்விட்டர் நிறுவனத்தின் வருமானத்தில் எதிர்பாரா வீழ்ச்சி | Twitter Elon Musk