ரஷ்ய ராணுவ டேங்கியை சுற்றி காய்கறிகளை பயிரிட்ட உக்ரைன் விவசாயி!

0
123

உக்ரைன் தலைநகர் கீவுக்கு அருகே எரிந்து போன ரஷ்ய ராணுவ டேங்கியை சுற்றிலும் ஒரு விவசாயி காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.

ரஷ்ய துருப்புகள் கிவ் நகரில் தாக்குதல் நடத்திய போது அங்கிருந்த ஏராளமான மக்கள் வெளியேறினார்கள். மீண்டும் கிவ் நகரம் உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் வெளியேறி மக்கள் வீடு திரும்பினார்கள்.

அந்த வகையில் தனது இருப்பிடத்திற்கு திரும்பிய அந்த விவசாயி தனது நிலத்தில் எரிந்துப்போன ரஷ்ய ராணுவ டேங்கி ஒன்று கிடப்பதை கண்டார்.

அந்த டேங்கியை அகற்ற அவர் முயன்ற போதும் அது பலனளிக்காததால் எரிந்துப்போன டேங்கியை சுற்றிலும் காய்கறிகளை பயிரிட ஆரம்பித்தார்.

தற்போது அவரது நிலம் போர் அடையாளங்களுடன் கூடிய காய்கறி தோட்டமாக விளங்குகிறது.