‘குரங்கு அம்மை’ Monkeypox பரவலை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு 

0
660

உலக சுகாதார அமைப்பு, ‘குரங்கு அம்மை’ Monkeypox பரவலை சர்வதேச அவசர நிலையாக அறிவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக மத்திய, மேற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் குரங்கு அம்மை  Monkeypox தொற்று நோய் இருந்து வருகிறது.

உலகம் முழுவதுமாக பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை, கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் அமெரிக்காவிலும் பரவ ஆரம்பித்தது.

நைஜீரியாவில் இருந்து டெக்ஸாஸ் மாகாணத்துக்கு வந்த ஒருவர் மூலமாக அந்நாட்டில் குரங்கம்மை பரவ தொடங்கியது. உரிய நேரத்தில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியதால் பல்வேறு மாகாணங்களுக்கு குரங்கம்மை பரவியது. கடந்த சில வாரங்களில் 75 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோயால் 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குரங்கு அம்மை நோய் பரவல் உலகளாவிய சுகாதார அவசர நிலை என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அறிவித்துள்ளார். ஐரோப்பாவுக்கு குரங்கு அம்மையால் அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பல்வேறு நாடுகளில் தொற்று பரவி வருவதை அடுத்து சர்வதேச சுகாதார அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வருடங்களில் கொரோனாவுக்கு அடுத்தப்படியாக குரங்கு அம்மை நோயை சுகாதார நெருக்கடி நிலையாக அறிவித்துள்ளது.

குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.