நாடாளுமன்றத்தில் காலியாக இருக்கும் எம்.பி பதவி!

0
573

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) தெரிவு செய்ததன் மூலம் வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆசனம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க (Dhammika Dasanayake) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதியாக தாம் கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி இன்று முதல் பதவி விலகல் அமுலுக்கு வரும் என ரணில் விக்கிரமசிங்க எழுத்து மூலம் தமக்கு அறிவித்துள்ளதாகவும் செயலாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, 1988 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 64 (5) இன் அடிப்படையில் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.