பரபரப்பில் தென்னிலங்கை அரசியல்; பிரதமராகின்றாரா சஜித்?

0
780

நாட்டின் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச திடீரென ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் 8வது நிறைவேற்றதிகாரம் உடைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நீதியமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சற்றுமுன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை திடீரென சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் துயரம் மற்றும் பேரழிவைத் தவிர்க்க ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க எதிர்க்கட்சிகளின் உறுதியை மீண்டும் வலியுறுத்துவதாகவும் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்காக நாடாளுமன்றத்தில் குழு அமைப்பை வலுப்படுத்தவும் சஜித் பிரேமதாச ஜனாதிபதிக்கு முன்மொழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை ஜனாதிபதியுடனான சந்திப்பை அடுத்து நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச நியமிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.