எரிபொருள் விநியோகம் குறித்து கஞ்சன அமைச்சர் வெளியிட்ட தகவல்!

0
1249

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் அட்டை மற்றும் வாகன இலக்க விதிமுறை கட்டாயமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வணிகங்கள் அல்லது பல வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள், தங்களின் அனைத்து வாகனங்களையும், நிறுவன பதிவு இலக்கத்தின்கீழ், பதிவு செய்வதற்காக தேசிய எரிபொருள் அட்டையானது, சில தினங்களில் மேம்படுத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தரவுகள் சரிபார்க்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு வாகனத்துக்கும் குறீயீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். வாகனங்களை வைத்திருப்போர் இணைத்தளம் ஊடாக தேசிய எரிபொருள் அட்டைக்காக தங்களைப் பதிவுசெய்து கொள்ளலாம் என அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.

இதேநேரம், 47 ஆயிரம் மெற்றிக் டன் டீசல் தாங்கிய கப்பல் நேற்றைய தினம் நாட்டை வந்தடைந்தது. அந்தக் கப்பலில் இருந்து எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இன்று முன்னெடுக்கப்படுவதாக இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாளை மறுதினம் பெற்றோல் கப்பல நாட்டை வந்தடைய உள்ளது. இவ்வாறான நிலையில், இந்த வார்த்தில், எரிபொருள் விநியோகப் பணிகளை ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என இலங்கை கனிய எண்ணெய் தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் சாந்த சில்வா எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.