கோட்டாவை வெளியேற்றுங்கள்; மாலைதீவில் வெடித்த போராட்டம்

0
247

இலங்கை ஜனாதிபதியை அந்நாட்டிற்கு அனுப்புமாறு அதிகாரிகளை கோரி மாலைதீவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் மாலைதீவு மக்களும் புலம்பெயர்ந்த இலங்கையர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.

அதோடு இலங்கை அதிபர் கோட்டாபயக்கு மாலைதீவில் புகலிடமோ அல்லது அகதி அந்தஸ்தோ வழங்கக்கூடாது என மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் மாலைதீவு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தைய்யிப் ஷாஹிம்