இலங்கை சிறுவனுக்கு பணம் அனுப்பி வந்த கனடா தம்பதி: பின்னர் தெரியவந்த உண்மை

0
917

இலங்கையில் வாழும் சிறுவன் ஒருவனுக்கு ஒரு கனேடிய தம்பதியர் பண உதவி செய்து வந்தார்கள்.

ஃபெலிக்ஸ் மற்றும் லீனா மெண்டிஸ் (Felix and Lileena Mendis) என்னும் அந்த தம்பதியர் World Vision Canada என்ற அமைப்பின் மூலமாக இலங்கையிலுள்ள Gethishkahn என்ற சிறுவனுக்கு உதவி வந்தார்கள்.

அந்த சிறுவனுக்கு கால்பந்து விளையாட்டு பிடிக்கும் என்பது முதல் அவன் எப்படி இருக்கிறான்? என்ன செய்கிறான்? என்பது வரையிலான விவரங்கள் அவ்வப்போது தம்பதியருக்கு அளிக்கப்பட்டுவந்துள்ளன.

இந்நிலையில், ஒரு கட்டத்தில் Gethishkahnஐ நேரடியாக இலங்கைக்குச் சென்று சந்திப்பதென முடிவு செய்தார்கள் தம்பதியர். 2019ஆம் ஆண்டு அவர்கள் அவனை சென்று சந்திப்பதற்காக ஏற்பாடுகள் செய்தபோது கொரோனா பிரச்சினை தடையாக வர அவர்களால் இலங்கைக்கு பயணம் செய்ய முடியாமல் போய்விட்டது.

இந்த ஆண்டு அவர்கள் மீண்டும் Gethishkahnஐ சென்று காண ஏற்பாடு செய்ய World Vision Canada அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லையாம். எனவே, இலங்கையிலுள்ள தங்கள் நண்பர் ஒருவருடைய உதவியுடன் Gethishkahnஐக் கண்டுபிடித்து நேரடியாக அவன் முன் சென்று நின்றிருக்கிறார்கள் ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர்.

சிறுவன் Gethishkahn வளர்ந்து பெரியவனாகிவிட்டிருக்க அவனைக் கண்ட ஃபெலிக்ஸ், லீனா தம்பதியருக்கு ஒரே சந்தோஷம். ஆனால், அவனிடம் பேசியபோது அவர்களுக்கு ஒரு பெரும் ஏமாற்றம் காத்திருந்தது. தாங்கள்தான் அவனுக்கு பண உதவி செய்தவர்கள் என லீனா Gethishkahn இடம் கூற அவனோ இல்லை மேடம் எனக்கு ஒரு சென்ட் கூட கிடைக்கவில்லையே என்று கூற அதிர்ந்து போயிருக்கிறார்கள் தம்பதியர்.

பிறகு World Vision Canada அமைப்பை தொடர்பு கொண்ட போதுதான் அவர்களுக்கு உண்மை தெரியவந்துள்ளது. அவர்கள் Gethishkahnக்கு உதவுவதாக அணுப்பிய பணம் அவனுக்குக் கொடுக்கப்படாமல் அவன் சார்ந்த சமுதாயத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.  

கனடாவிலிருந்து இலங்கை சிறுவன் ஒருவனுக்கு பணம் அனுப்பிவந்த தம்பதியர்: பின்னர் தெரியவந்த உண்மை | The Couple Sent Money From Canada

அந்த சமூகத்துக்கு உதவியதில் தங்களுக்கு மகிழ்ச்சிதான் என்று கூறும் ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர். ஆனால் தங்களுக்கு World Vision Canada அமைப்பு உண்மையான தகவலைத் தரவில்லை. தங்களிடம் பொய்கள் கூறப்பட்டுள்ளன என்பதை அறிந்து பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கிறார்கள்.

ஃபெலிக்ஸ், லீனா தம்பதியர் தாங்கள் Gethishkahnக்கு உதவுவதாக நம்பிக்கொண்டிருக்க அவனது குடும்பமோ இன்னமும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதை அறிந்ததும் உடனடியாக World Vision Canada அமைப்புடனான உறவைத் துண்டித்துக் கொண்டுள்ளார்கள் அவர்கள்.

ஆனாலும், இன்னமும் Gethishkahnக்கு உதவுவது என்ற திட்டத்தை மட்டும் விடப்போவதில்லை என்கிறார்கள் அவர்கள். அத்துடன் தற்போது அவர்கள் வேறொரு நேரடி தொண்டு நிறுவனத்துக்கு உதவிவருகிறார்கள்.