ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த மூவர் கைது!

0
197

இலங்கையில் அரசாங்கத்தை பதவி விலக்கோரி நாட்டு மக்கள் நேற்றைய தினம் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட பழங்கால பொருட்கள் கொண்ட வீட்டிற்கு போராட்டக்காரர்கள் போல் மாறுவேடமிட்ட நாசகாரர்கள் குழுவொன்று தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மூன்று பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த நபர்கள் சிக்கினர்! | Protest Pm Ranil House Fire Three Suspects Arrest