தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மாறிய மகிந்த ராஜபக்ச!

0
469

இந்த நாட்டிலிருந்து ராஜபக்ச தலைமுறையினர் கொள்ளையடித்த சொத்துக்கள் அனைத்தும் திரும்ப பெறப்பட வேண்டும் என நடிகர் சுமிரன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள ஆர்ப்பாட்டத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மாறிய மகிந்த ராஜபக்ச! | The Actor Requested To Assess The Assets Rajapaksa

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ராஜபக்சவிடம் இருந்த செல்வமும், இன்று அவரது மகன்களிடம் உள்ள செல்வமும் மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் தெற்காசியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரராக மகிந்த ராஜபக்ச எவ்வாறு மாறினார் என்பதை நாம் கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.