பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னாவின் வீட்டில் இராணுவ வீரர் மரணம்

0
210

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் பணியாற்றிய இராணுவ பொறியிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொட்டாவையிலுள்ள கமல் குணரத்னவின் வீட்டின் கூரையை புனரமைத்துக் கொண்டிருந்த நிலையில் கீழே விழுந்து படுகாயம் அடைந்துள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பிரேமதாஸ என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் மனைவியான 37 வயதான வத்சலா லக்மாலி விக்ரம குணரத்ன கணவரின் மரணம் தொடர்பில் சாட்சியமளித்துள்ளார்.

“உயிரிழந்தவர் எனது கணவர். எங்களுக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. எங்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு 14 வயதாகின்ற நிலையில், மகனுக்கு 07 வயதாகின்றது. கணவர் இலங்கை இராணுவ பொறியியல் பிரிவில் பணிபுரிகிறார்.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் வீட்டில் இராணுவ வீரர் மரணம் | Who Appointed Secretary Of Defense

கடந்த 25ஆம் திகதி பாதுகாப்புச் செயலாளரின் வீட்டில் பணியாற்றிய நிலையில் விபத்துக்குள்ளாகி உள்ளார். கணவர் முதலில் ஹோமாகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் தேசிய வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மாலை 6.00 மணியளவில் தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்“ எனத் தெரிவித்துள்ளார்.