தமிழகத்தில் அரிவாளால் வெட்டிய தந்தை – மகன் கைது!

0
207

தமிழகத்தின் “ஆக்ஸ்போர்ட்” என்று அழைக்கப்படும் பாளையங்கோட்டையில் இரண்டு பேரை அரிவாளால் வெட்டிய தந்தை – மகனை பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் – பாளையங்கோட்டையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 51), கணேசன் (54) ஆகிய இருவரே அரிவாளால் தாக்கப்பட்டுள்ளனர்.

இருவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய தந்தை-மகன்! பகீர் சம்பவம் | Father Son Brutally Cut Two People With A Scythe

இவர்கள் இருவரும் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் (26-06-2022) நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

இது தொடர்பில் பாளையங்கோட்டை பொலிஸார் முறைப்பாடு செய்து விசாரணை நடத்தினர்.

பொலிஸார் விசாரணை

தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்த கூலி தொழிலாளியான கங்கை முருகன் (55), அவரது மகன் மணிகண்டன் (19) ஆகியோர் பாலசுப்பிரமணியன் மற்றும் கணேசன் ஆகியோருடன் ஏற்பட்ட தகராறில் அவர்களை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து பொலிஸார் கங்கை முருகன், மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இருவரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய தந்தை-மகன்! பகீர் சம்பவம் | Father Son Brutally Cut Two People With A Scythe