பிரிட்டிஷ் பிரதமரை துரத்தும் போலீசார்!

0
595

பொலிசார் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சனைத் துரத்த, அவர் அவர்களிடமிருந்து தப்புவதற்காக ஓட்டம் பிடிப்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

இந்த சம்பவம் இங்கிலாந்துக்கும் நியூசிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறும் இங்கிலாந்தின் Headingley கிரிக்கெட் மைதானத்தில் நடந்துள்ளது.

விடயம் என்னவென்றால், உண்மையில் ஓடியவர் போரிஸ் ஜான்சன் அல்ல, அவரைத் துரத்தியவர்களும் பொலிசார் அல்ல.

கிரிக்கெட் ரசிகர் ஒருவர், போரிஸ் ஜான்சனைப் போன்று தலையில் விக்கும், வெள்ளை சட்டையும், டையும் அணிந்து ஓட, அவரது நண்பர்கள் பொலிஸ் உடை அணிந்து அவரை ஜாலியாகத் துரத்தியுள்ளார்கள்.

அவரது சட்டையின் பின் பக்கம், ‘பத்தாம் எண்ணுக்காக போரிஸுக்கு வாக்களியுங்கள்’ என்று எழுதியிருக்கிறது.

அதாவது, கோவிட் நேரத்தில் விதிகளை மீறி பிரதமர் இல்லத்தில் மதுபான பார்ட்டி நடத்தியதைக் குறிக்கும் வகையில் அப்படிச் செய்திருக்கிறார்கள் நண்பர்கள் சிலர்.

470,000 பேர் அந்த வீடியோவைப் பார்வையிட்டுள்ள நிலையில், அது இணையத்தில் வைரலாகியுள்ளது.