இலங்கையில் அடுத்தடுத்து கட்டண உயர்வு!

0
328

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்களின் விலைகளும், பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரண்டாவது கிலோ மீட்டருக்கான முச்சக்கரவண்டி கட்டணமானது 90 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டண உயர்வானது, இன்று (26-06-2022) முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்களுக்கு அடுத்தடுத்து வரும் பகீர் தகவல்! இதன் கட்டணமும் அதிகரிப்பு!

இருப்பினும், முதல் கிலோமீற்றருக்கு 100 ரூபா என்ற கட்டணத்தில் மாற்றம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முச்சக்கரவண்டி கட்டண உயர்வின்படி முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணம் 100 ரூபாவாகவும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றருக்குமான கட்டணம் 80 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டிருந்தது.