கனடாவில் ரயில் தண்டவாளத்தின் நடுவில் படுத்து தூங்கிய பெண்!

0
147

கனேடிய நகரம் ஒன்றில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்துக்கு நடுவில் கிடப்பதைக் கண்ட ரயில் சாரதி ரயிலை உடனடியாக நிறுத்தினார்.

கனடாவின் Prince Albert நகரிலுள்ள தண்டவாளம் ஒன்றில் ரயில் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் நடுவில் ஒரு பெண் கிடப்பதைக் கண்ட ரயிலின் சாரதி உடனடியாக பிரேக்கை அழுத்தியிருக்கிறார்.

ஆனாலும், உடனடியாக ரயில் நிற்காமல் அந்தப் பெண் கிடக்கும் இடத்தை சற்று தாண்டிதான் நின்றுள்ளது. என்ன நடந்திருக்கும் என கணிக்க இயலாமல் உடனடியாக ரயில்வே ஊழியர்கள் ரயிலுக்கு அடியில் சென்று பார்த்திருக்கிறார்கள்.

நல்ல வேளையாக அந்தப் பெண்ணுக்கு லேசான காயங்களே ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அந்த ரயில் சற்று முன்னோக்கி நகர்ந்திருக்குமானால் அந்தப் பெண் உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

ரயில் தண்டவாளத்தின் நடுவில் எப்படி அந்தப் பெண் படுத்துத் தூங்கினார் என்பது தெரியவில்லை.