திருகோணமலையில் கைகலப்பில் வாள்வெட்டுக்கு இலக்காகி மூவர் வைத்தியசாலையில் அனுமதி

0
130

திருகோணமலையில் ஏற்பட்ட கைகலப்பில் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் (23-06-2022) உப்புவெளி – கன்னியா மாங்காய் ஊற்று பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

சகோதரிகள் இருவர் மாதாந்தம் சீட்டு பணம் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் குறித்த நேரத்தில் பணத்தை கொடுக்காமையால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, அக்காவின் கணவர் கோபம் கொண்டு தங்கையின் கணவரை கத்தியால் வெட்டியுள்ளதுடன் அதனை தடுப்பதற்கு சென்ற சக நண்பர்கள் இருவரும் கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையின் விபத்து சேவை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் அரங்கேறிய கொடூர சம்பவம்: மூவர் வைத்தியசாலையில்