அவிசாவளையில் லஞ்சம் கொடுத்த பெண் கைது!

0
459

அவிசாவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியிடம் 250,000 ரூபா இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (20-06-2022) மேற்கொண்ட சுற்றிவளைப்பைத் தொடர்ந்து அவிசாவளை பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த மற்றும் விநியோகித்த குற்றச்சாட்டில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

35 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சந்தேக நபரை பிணையில் விடுவிக்க 250,000 ரூபாவை வழங்குமாறு அவரது மனைவி அவிசாவளை பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியை அணுகியுள்ளார்.

பணம் பெறுவதற்கு ஒப்புக்கொண்ட OIC, சீதாவகபுர பொலிஸ் பிரிவுக்கு அறிவித்ததுடன் இது தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அறிவித்தது,

150,000 ரூபாவை முதற்கட்டமாக OICக்கு வழங்குவதற்காக வந்த போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் 32 வயதுடைய அவிசாவளை பகுதியைச் சேர்ந்த பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணிடம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளை தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவரின் நடவடிக்கைகள் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.