அடுத்த போப்பாக ஆசியா அல்லது கறுப்பினத்தவர்

0
157

போப் பிரான்சிஸ் (Pope Francis) ஓய்வு பெற்றால் அடுத்த போப்பாக ஆசியா அல்லது கறுப்பினத்தைச் சேர்ந்தவர் வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பிலிப்பைன்சைச் சேர்ந்த கார்டினல் லூயிஸ் அன்டோனியோ டேக்லே (Luis Antonio Tagle) மற்றும் கானாவைச் சேர்ந்த கார்டினல் பீட்டர் டர்க்சன் (Peter Turkson) ஆகியோர் போப்பாக வர வாய்ப்பிருப்பதாக பந்தயக்குழு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Luis Antonio Tagle
peter turkson

தற்போது 85 வயதாகும் போப் பிரான்சிற்கு சமீபத்தில் முழங்கால் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போது முதல் அவர் வெளியிடங்களுக்கு சக்கர நாற்காலி மூலம் தான் சென்று வருகிறார்.

மேலும் அவர் போப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவின என்பது குறிப்பிடத்தக்கது.