இரண்டு நாட்கள் எரிபொருள் வரிசையில் நின்றவர் உயிரிழப்பு

0
173

சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரகம வெவிட்ட பிரதேசத்தில் 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அங்கேயே உறங்கி வரிசையில் நின்று வீடு திரும்பிய அவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.