பெட்ரோல் நிலையத்தில் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய யுவதி!

0
161

எரிபொருள் வரிசையில் நின்றுகொண்டிருந்த போதே தன்னுடைய பிறந்த​நாளை யுவதியொருவர் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வெலிகம பகுதியில் உள்ள சிப்பெட்​கோ எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதியின் பிறந்தநாளான ஜூன் 19ஆம் திகதியன்று, ​​ஸ்கூட்டரின் மேல் கேக் வைத்து வெட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வரிசையில் நின்றிருந்த ஏனையோரும் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியை அலங்கரித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.