பாராளுமன்றத்தை புறக்கணிப்பதாக அனுரகுமார தெரிவிப்பு

0
523

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரை நியமித்து ஒரு மாதத்துக்கும் மேலாகியும் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு உரிய பதில் கிடைக்காததால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பேச்சாளராக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மாறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி தனது அதிகாரங்களைப் பயன்படுத்தியதாகவும் அனுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து உறுப்பினர்களும் இந்த வாரம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்கவுள்ளதாக கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமையும் இங்கு றிப்பிடத்தக்கது.

சஜித்தை தொடர்ந்து  நாடாளுமன்றம் தொடர்பில் அனுரகுமார எடுத்த  தீர்மானம்