இலங்கை கிரிக்கெட் அணிக்கு மைத்திரி வாழ்த்து

0
110

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் வெற்றியடைந்த இலங்கை துடுப்பாட்ட அணிக்கு பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பல மாதங்களாக சித்திரவதைக்கு உள்ளான இலங்கையர்களின் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியை கொண்டு வந்தது இலங்கை கிரிக்கெட் அணியினர். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் நன்றி. என் அன்பான வாழ்த்துக்கள். என குறிப்பிட்டுள்ளார்.