மட்டக்களப்பு வாவியினை பாதுகாக்க ஆரம்பித்த சாரணிய மாணவர்கள்!

0
122

இலங்கையின் இரண்டாவது பெரிய வாவியாக கருதப்படும் மட்டக்களப்பு வாவியினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு இன்றைய தலைமுறையினருக்கு உள்ளது.

இதனை கருத்தில்கொண்டு மட்டக்களப்பின் பிரபல பாடசாலையான புனித மைக்கேல் கல்லூரியின் சாரணிய மாணவர்களினால் வாவிக்கரை தூய்மைப்படுத்தப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மட்டக்களப்பு வாவியினை பாதுகாக்க தொடங்கிய சாரணிய மாணவர்கள்!

சாரணிய மாணவர்களின் வருடாந்த செயற்றிட்டத்திற்கு அமைவாக புனித மைக்கேல் கல்லூரியின் சாரணிய மாணவர்களினால் இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் வாவிக்கரை ஓரங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வாவிக்குள் மீன்பெருக்கத்திற்க்காவும் வாவியினையை தூய்மையாக வைத்திருப்பதற்காகவும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தனிச்சிறப்புக்கொண்ட இந்த வாவியினை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மட்டக்களப்பு மக்களுக்கு உள்ளதாகவும் அனைவரையும் தங்களுடன் இணைந்து இந்த பணியை மேற்கொள்ள முன்வருவமாறும் புனித மைக்கேல் கல்லூரியின் சாரணிய மாணவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.