நயினாதீவு நாகபூசணி அம்மன் பக்தர்களை வியப்பில் ஆழ்த்திய ராஜநாகம்

0
1489

நேற்றைய தினம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய தீர்த்தக் கேணியடியில் ராஜநாகம் ஒன்று காட்சி கொடுத்தமை பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் வருடாந்த மகோற்சப பெருவிழா வரும் (29.06.2022) ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2022 தெற்போற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் அம்மன் ஆலய தீர்த்தக் கேணியடியில் ராஜநாகம் காட்சி கொடுத்துள்ளமை நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்கவைத்துள்ளது. இலங்கையில் தாய்தெய்வ வழிபாட்டின் மிகு தொன்மைக்குச் சான்றாக நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயம் விளங்குகின்றது.

அதுமட்டுமல்லாது அம்பாளின் காற்சிலம்பு விழுந்த புவனேஸ்வரி பீடமாகவும் நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் கருதப்படுகிறது.

நாகபாம்பு பூக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குவதுடன், வுரலாற்றுப் பெருமையும், வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக ஈழதின் புகழ் பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.