மோட்டார் சைக்கிளில் ஓட்டுநர்களை துப்பாக்கி காட்டி மிரட்டிய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி!

0
252

குருநாகலில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்துவிட்டதைக் கேள்விப்பட்டு மகிழ்ச்சியற்ற நிலை இருந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவரிடம் இலங்கை பொலிஸார் கைகலப்பில் ஈடுப்பட்டது கமெராவில் பதிவாகியுள்ளது. 

எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் பல நாட்களாக வரிசையில் காத்திருந்தவர்களில் அவரும் ஒருவர்.

மேலும் அங்கிருந்த பலருடன் பொலிஸார் மோதலில் ஈடுபட்டதால் அங்கு சற்று நேரம் பதற்ற நிலை நிலவியது.

இதேவேளை, தொழிலாளர்கள் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் நிரப்பு நிலைய பணியாளர்கள் நிலத்தடி சேமிப்பு வசதியை காட்டுமாறு கோரிக்கை விடுத்தார். 

மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை இழுத்துச் செல்லும் போது ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி துப்பாக்கியைக் காட்டி அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.