அமெரிக்க ஜனாதிபதி இலங்கைக்கு ஒத்துழைப்பு

0
626

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வோஷிங்டனில் தூதுவர்களை சந்தித்தபோது இலங்கைக்கான தூதுவர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்த ஜோ பைடன் (Joe Biden) மேற்கண்டவாறு கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இலங்கைக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்திருப்பது மகிழ்ச்சியளைபதாக பிரதமர் ரணில் கூறினார்.

இதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (Joe Biden) தனது நன்றியையும் இலங்கைப்பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.