30,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் திடீர் நீரூற்று!

0
187

இங்கிலாந்தில் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த பிரிட்டீஸ் ஏர்வேஸ் விமானத்தின் கேபினில் தண்ணீர் மளமளவென கொட்டும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து வாஷிங்டன் நோக்கி விமானம் சென்ற நிலையில், எக்கனாமிக் கிளாஸ் பகுதி கேபினில் திடீரென தண்ணீர் நீரூற்று போல் கொட்டத் தொடங்கியது.

குடிநீருக்கான வால்வ் உடைந்து தண்ணீர் கொட்டியதாகவும் எந்தவொரு அசம்பாவிதமின்றி வாஷிங்டனில் விமானம் தரையிறக்கப்பட்டதாகவும் பிரிட்டீஸ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

மேலும் விமானத்தில் பொலபொலவென தண்ணீர் கொட்டும் புகைப்படம் இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.