ALS என்ற மருந்தை அங்கீகரித்த உலகின் முதல் நாடு கனடா

0
540

Amyotrophic Lateral Sclerosis (ALS) மருந்தை அங்கீகரித்த உலகின் முதல் கட்டுப்பாட்டாளராக கனடா மாறியுள்ளது.

இது 20 ஆண்டுகளில் அபாயகரமான மோட்டார் நியூரான் நோய்க்கு அங்கீகரிக்கப்பட்ட மூன்றாவது சிகிச்சை மருந்தாகும். இந்த முடிவை மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட Amylyx Pharmaceuticals திங்களன்று அறிவித்துள்ளது.

அத்துடம் இந்த மருந்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய கூடுதல் ஆதாரங்களை ஹெல்த் கனடாவுக்கு நிறுவனம் வழங்கும் நிபந்தனையுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ALS நோயாளிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு இந்தச் செய்தி பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. ALS நோயினால் பாதிக்கப்படுபவர் நகரும், பேசும், விழுங்கும் மற்றும் சுவாசிக்கும் திறனை படிப்படியாக இழக்கினறனர்.

இந்நிலையில் கனடாவின் ALS சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி Tammy Moore இந்த நோயின் முன்னேற்றத்தை மெதுவாக்கும் மற்றும் மக்கள் தங்கள் செயல்பாட்டை நீண்ட காலம் தக்கவைக்க அனுமதிக்கும் எதுவும் மிகவும் முக்கியமானது என கூறினார்.

அதேசமயம் கனடாவில் இந்த மருந்துக்கான அனுமதி உலகெங்கிலும் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கையைத் தரும் என்று Amylyx இன் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜஸ்டின் க்ளீ தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது ஒரு மகத்தான மைல்கல் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக கனடாவில் உள்ள ALS சமூகத்திற்கு சிறப்பான செய்தி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Canada becomes first country to approve experimental ALS drug treatment  Albrioza - National | Globalnews.ca

இதேவேளை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,000 கனடியர்கள் ALS நோயால் பாதிக்கப்படுவதுடன் 1,000 பேர் ஆண்டுதோறும் இந்த நோயால் உயிரிழக்கின்றதாகவும் கூறப்படுகின்றது.

ALS நோயால் பாதிக்கப்பட்டவர்களில் எண்பது சதவீதம் பேர் நோயறிதலுக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

அல்பிரியோசா என்ற புதிய மருந்து சோடியம் ஃபீனைல்பியூட்ரேட் மற்றும் உர்சோடாக்ஸிகோல்டாரைன் ஆகியவற்றின் கலவையாகும். ஒரு மருத்துவ பரிசோதனையில் மருந்துப்போலி பெற்றவர்களுடன் ஒப்பிடும்போது அதை எடுத்துக் கொண்டவர்களின் குறைவின் விகிதத்தை குறைக்க உதவுவதாகத் தோன்றியது.

எனினும் நோயாளி குழுக்களின் உற்சாகம் இருந்தபோதிலும் மருத்துவ முடிவுகள் ஒப்புதலை நியாயப்படுத்துகிறதா என்பது குறித்து சில விவாதங்கள் உள்ளன.

மேலும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஆலோசனைக் குழு, அல்பிரியோசா மருந்து பயனுள்ளது என்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.