திருவண்ணாமலையில் கிணற்றில் இருந்து மாணவி சடலமாக மீட்பு!

0
223

திருவண்ணாமலை – ஆரணி அருகே உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை – ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரின் மகள் ஹரிப்பிரியா (வயது 16). இவர், ஆரணி அரசினர் மகளிர் உயர்நிலைப் பாடசாலையில் உயர்கல்வி படித்து வந்தார்.

கடந்த 27-ம் திகதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் உப்பட உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் காணவில்லை. 

இது தொடர்பில்  ஆரணி தாலுகா பொலிஸார் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் ஆகாரம் கிராமத்தில் ஜெகதீசன் என்பவருடைய விவசாய கிணற்றில் ஹரிப்பிரியா பிணமாக கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பிரதி பொலிஸ் பரிசோதகர் பிரகாசம் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு வைத்தியசாலையில் அனுப்பி வைத்தனர். 

மாணவி காணாமல் போன வழக்கை தற்கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து மாணவி ஹரிப்பிரியா ஏன் இறந்தார், காதல் தோல்வியா, பள்ளி தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தாலா என பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆரணி: காணாமல்போன பள்ளி மாணவி இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்பு |  Arani The body of a missing schoolboy was recovered two days later |  Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News |

கிணறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி! தீவிர விசாரணையில் பொலிஸார்  - கனடாமிரர்