சிறுமி அயிஷா கொலைச் சம்பவம்: ஜனாதிபதி அளித்த உறுதி!

0
290

பண்டாரகம – அட்டுலுகமவில் 9 வயதான சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விரைவில் நீதி கிடைக்கும் என தாம் உறுதியளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ அவரது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ளார்.

கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ வெளிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சிறுமி பாத்திமா ஆய்ஷா படுகொலை செய்யப்பட்டமை இதுவரையில் மர்மமாக உள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தகவல்கள் எவையும் இதுவரையில் கிடைக்கவில்லை.

இருப்பினும் இன்று இடம்பெறுகின்ற மரண பரிசோதனையின் பின்னர் பல தகவல்கள் வெளியாகும் என விசாரணைகளை மேற்கொள்ளும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுமியின் கொலை தொடர்பான விசாரணைகளுக்காக தற்போது 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் உள்ள பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.