சிறுமி ஆயிஷா படுகொலை; விசாரணை வளையத்துள் தந்தை

0
966

பண்டாரகம, அட்டலுகம பகுதிச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற ஒன்பது வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தையிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பண்டாரகம பொலிஸாருக்கு மேலதிகமாக பாணந்துறை பிரதேச குற்ற விசாரணைப் பிரிவினர் மற்றும் புலனாய்வு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாணந்துறை பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமந்த வெதகே தெரிவித்தார்.

சிறுமி   ஆயிஷா படுகொலை; விசாரணை வளையத்துள் தந்தை

சிறுமி காணாமல் போனமை குறித்து பாணந்துறையில் வசிக்கும் சிறுமியின் நெருங்கிய உறவினர் ஒருவர் தொடர்பிலும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் புறக்கோட்டை பிரதான பஸ் நிலையத்தில் பெண் ஒருவருடன் சிறுமி இருப்பதாக பேஸ்புக்கில் வெளியான தகவல் தொடர்பில் ஆராயுமாறு கொழும்பு பிரதேச பொலிஸாருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் இரவு அணிந்திருந்த ஆடையை மோப்பம் பிடித்த ஹொரண பொலிஸ் நாயான “டனோ” சிறுமி கோழி இறைச்சி வாங்கச் சென்றதாகக் கூறப்படும் கடைக்கு அருகில் போய் நின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.