ஆஸ்கார் விருதை பெற்ற பிரபல இசையமைப்பாளர் தீடீர் மரணம் !!

0
167

சமீபகாலமாக திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இறப்புக்குள்ளாவது ரசிகர்களிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஓர் பிரபலம் இறப்புக்குள்ளான தகவல் ரசிகர்களிடையே பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது.

Where Is Vangelis Wife Veronique Skawinska Now? Children Husband & Net  Worth Details - Sound Health and Lasting Wealth

அதாவது கிரீஸ் நாட்டில் பிறந்தவர் தான் வாங்கலஸ். இவர் திரைப்படங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள் மற்றும் செய்திப்படங்கள் என பலவகைப்பட்ட படைப்புகளுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.

அவர் இசையில் வெளியான ‘சேரட்’ என்ற படத்துக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றுள்ளார். இந்நிலையில் பிரான்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்துக்கு கிரீஸ் நாட்டின் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வாங்கலஸ் மரணத்துக்கு அஞ்சலி தெரிவித்துள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ‘நமது எலக்ட்ரானிக் இசைகுரு தற்போது நம்மோடு இல்லை. அவருக்கு அஞ்சலி” எனக் கூறி அவரோடு இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் மரணம்… 'குரு'வுக்கு அஞ்சலி செலுத்திய  ரஹ்மான்!