உலக தரப்படுத்தலில் இலங்கை பாரிய வீழ்ச்சி!

0
664

உலகின் இரண்டாவது அதிக பணவீக்கம் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளதாக, ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீபன் ஹெங்க் வழங்கிய இந்த வார பணவீக்க அட்டவணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இந்த பட்டியலில் சிம்பாப்வே மட்டுமே இலங்கைக்கு மேலே உள்ளது. லெபனான், சூடான், ஆப்கானிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகளை தாண்டி இலங்கை பணவீக்கம் சாதனை அளவில் உயர்ந்துள்ளது என்பதை பேராசிரியரின் அட்டவணை காட்டுகிறது.

இந்த வார பணவீக்க அட்டவணையில், இலங்கை மீண்டும் ஒருமுறை தீவிரமான ஆய்வுக்கு உள்ளாகியுள்ளது, பணவீக்கம் 132 சதவீதமாக உள்ளது என பேராசிரியர் ஸ்டீவன் ஹெங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.

1884 முதல் 1950 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த இலங்கை நாணயச் சபையொன்றை நியமித்தது. அவ்வாறான நடவடிக்கை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி தற்போது கவனம் செலுத்த வேண்டும் என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராக ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பேரழிவை ஏற்படுத்துவதை பாருங்கள். இலங்கை மக்களுக்கு கிடைத்தவை போதும். ராஜபக்ஷர்கள் செல்ல வேண்டிய நேரம் இது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.