புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவி குறித்து அலி சப்ரியின் தீர்மானம்!

0
332

புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்க முடியாது என முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நேற்று (14) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்க தயாராக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.