ஊரடங்கு தொடர்பில் வெளியிட்ட தகவல்!

0
605

இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மாலை 6 மணிக்கு மீள அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05 மணிக்கு மீளவும் ஊரடங்கு தளர்த்தப்படுமெனவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில்,

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துபூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள வீதிகள், ரயில் பாதை, பொதுப் பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு எவருக்கும் அனுமதி இல்லை.

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப் பகுதியிலும் இரவு 7 மணி வரை தனியார் சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஒசுசல உள்ளிட்ட மருந்து விநியோக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஊரடங்கு காலத்தில் தடையின்றி அவசர சிகிச்சை மற்றும் மருந்துகளை பெற்றுக் கொள்வதற்கு நோயாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.