நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிக்க தயார்! கோட்டாபய

0
548

புதிய அரசாங்கத்துடன் கலந்துரையாடி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்த வாரத்திற்குள், நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையும் நியமிக்க முடிவு செய்துள்ளேன்.

மேலும், 19வது திருத்தம் விரைவில் வலுப்படுத்தப்படும். நாடு வழமைக்கு மாறிய பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.