உலக நாடுகளிடம் உக்ரைன் அதிபர் கோரிக்கை!

0
197

உக்ரைனின் ஒடேசா உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களை ரஷ்ய படைகள் முற்றுகையிட்டதால் தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்ட நிலையில், உணவு நெருக்கடியை தவிர்க்க உலக நாடுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இரண்டாம் உலகப்போருக்கு பின் முதன்முறையாக ஒடேசா துறைமுகத்தில் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதாகவும் இது உக்ரைன் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.

இதனைத் தடுக்க உலக நாடுகள் தலையிட்டு, ரஷ்ய தடுப்புகளை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) வேண்டுகோள் விடுத்துள்ளார்.

போர் காரணமாக உக்ரைனில் சுமார் 25 மில்லியன் டன் தானியங்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருப்பதாக ஐ.நா உணவு பிரிவு தெரிவித்துள்ளது.