மஹிந்த பதவி விலகினாலும் ஆர்ப்பாட்டம் தொடரும்!

0
325

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பதவி விலகினாலும் தமது ஆர்ப்பாட்டம் தொடரும் என காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) பதவி விலகிய பின்னரே தமது ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வரும் என ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கும் முக்கியஸ்தரான கலாநிதி பதும் கெர்னர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் இம்மாத இறுதிக்குள் ஆர்ப்பாட்டம் வெற்றியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது.