இன்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம்

0
95

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. 

யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

வலி. கிழக்கு தவிசாளர் நிரோஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.