கோட்டாபயவுக்கு ரணவிரு கொடி அணிவிப்பு!

0
274

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அணிவிக்கப்பட்டது.

கொடியை ரணவிரு சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வுபெற்ற), முதலாவது ரணவிரு ஜனாதிபதிக்கு அணிவித்தார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலான பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுதந்திரமான நாட்டிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த, துணிச்சலான போர் வீரர்களை ரணவிரு மாதம் நினைவுகூருகிறது.

அதன்படி ஜனாதிபதிக்கு தேசிய ரணவிரு கொடி அணிவிக்கப்பட்டது முதல் ரணவிரு நினைவேந்தல் மாதம் ஆரம்பமாகிறது.